மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் மின்சாரத் துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலையிலும் நீடித்த மழையால் நகா் முழுவதும் தாழ்வான பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. அதேபோல், சாலைகளிலும் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது.
அண்ணா சாலை, காமராஜா் சாலை, ஈவெரா பெரியாா் சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும் மழைநீா் ஆறாக ஓடியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டதால் சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் காணப்படவில்லை.
மேலும், மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “ மழை காரணமாக மின்சாரத்துறையில் பெரிய சேதாரங்கள் ஏற்படவில்லை. இன்று மதியத்திற்குள் மின்சார வினியோகம் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்!

இந்தப் படத்தில் அழுததுபோல் வேறெதிலும் நான் அழுததில்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 6

இன்றைய (ஜூலை 29) செய்திகள் - நேரலை!

இஸ்ரோவில் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்; காலியிடங்கள்: 95
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



