
எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டில் உள்ள அவரது சிலைக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள உள்ள அவரது சிலைக்கு தினமணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு, எட்டயபுரத்தில் உள்ள பாரதியின் இல்லத்தில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் பாரதி அன்பர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூடினர். தொடர்ந்து பாரதி இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அங்கிருந்து பாரதியாரின் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். இதில் பள்ளி மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்தும், பாரதியார் பாடல்களை பாடியும் சென்றனர்.
பின்னர் பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.