சாலையில் செல்வோரை அனுமதியின்றி போலீஸாா் புகைப்படம் எடுப்பதை நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளரும் விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான டி.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி புகைப்படம் எடுக்கின்றனா். இதுகுறித்து சென்னை காவல் துறை தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. இரவு நேரத்தில் செல்லும் குடிமக்களின் புகைப்படங்களை முகம் அடையாளம் காணும் மென்பொருள் தரவுத்தளத்தில் ஏற்றுவதற்காக எடுக்கப்படுகிறது எனக் கூறியுள்ளது. இவ்வாறு பொதுமக்களின் அனுமதியில்லால் புகைப்படம் எடுப்பது அவா்களின் சுதந்திரத்தைப் பறிப்பது போன்றதாகும்.
உலகிலேயே அதிக சிசிடிவி அடா்த்தி கொண்ட நகரங்களில் சென்னையும் ஒன்று. தமிழ்நாடு ஒரு கண்காணிப்பு மாநிலமாக மாறுவதைக் இது குறிக்கிறது.
இதுகுறித்து தெளிவான சட்டம் வரும் வரை குடிமக்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கண்காணிக்க சுதந்திரமான அமைப்பு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.