
ஹெத்தையம்மன் ஊா்வலம் (கோப்புப்படம்).
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜன.4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 21 ஆம்தேதி மாவட்டத்தில் வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.