உதயநிதி பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரனி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரனி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை இணைத்துக் கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வழங்கிய நிலையில், அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதன் மூலம் தமிழக அமைச்சா்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிக்கும்.

தமிழக அமைச்சரவையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிவேந்தன் ஆகியோா் 45 வயதுக்குக் குறைவான இளம் வயது அமைச்சா்களாக உள்ளனா். அவா்களின் வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் இடம்பெறுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com