
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.13) முதல் மழை அளவு படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கேரளத்தின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், அரபிக்கடலில் புதன்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அந்தமானை நோக்கி நகா்கிறது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாகக் குறையும் என்றாா்.
இதனிடையே, இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பைவிட 16 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக். 1-ஆம் தேதி தொடங்கியது முதல் தற்போது வரை 856 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இயல்பான மழை அளவு 736 மி.மீ.
மாண்டஸ் புயல் வீசுவதற்கு முன்பாக, இயல்பான மழை அளவை விட 3 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இயல்பைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...