ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பால் மக்கள் வேதனை!

நடப்பாண்டில் பால் விலை உயர்வைத்  தொடர்ந்து, இரண்டாவது முறையாக நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது. 
ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பால் மக்கள் வேதனை!
Published on
Updated on
1 min read


நடப்பாண்டில் பால் விலை உயர்வைத்  தொடர்ந்து, இரண்டாவது முறையாக நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆவின் பொருள்களின் விலைகளை அவ்வப்போது அந்நிறுவனம் உயர்த்தி வருகிறது. சமீபத்தில் ஐஸ்கிரீம், தயிர், நெய், ஆரஞ்சு நிற பால் பாக்கெட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்த்தி அறிவித்தது. ஆவின் பொருள்களின் விலை ஏற்றத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்ததுடன், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என அறிவித்தார். 

இந்நிலையில், ஆவின் நெய்யின் விலையை மீண்டும் உயர்த்தி அறிவித்துள்ளது ஆவின் நிறுவனம். 

ஆவினில் ஒரு லிட்டர் நெய் ரூ.580 இல் இருந்து ரூ. 630 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பிரீமியம் நெய் ரூ.630 இல் இருந்து ரூ.680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 லிட்டர் நெய் பாட்டில் விலை ரூ. 2,900 இல் இருந்து ரூ.3,250 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலையில் ஆவின் நெய், வெள்ளக்கிழமை(டிச.16) முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் விலையைத் தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com