ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0: இதுவரை 403 பேர் கைது

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையின் கீழ் இதுவரை 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0: இதுவரை 403 பேர் கைது

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையின் கீழ் இதுவரை 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கஞ்சா வேட்டை 3.0 தமிழகம் முழுவதும், 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளையும், சட்ட விரோதமாக அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களையும் முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு அறிவுத்தப்பட்டுள்ளனர். 
இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தும் குற்றச் செயலின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com