
பெங்களூருவில் இருந்து திருச்சி வந்த அரசு சொகுசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தமிழக அரசு சொகுசுப் பேருந்து, இன்று காலை திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.
வளைவில் திரும்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.