
கோப்புப்படம்
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க கூடாது என்றும், குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிப்பு அடைவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆனந்த் என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்கக் கோரியும், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்கத் தடை விதிக்கவும் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைக்க இதை செய்யுங்க!
இந்த நிலையில், பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடைக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.