உடல் எடையைக் குறைப்பது என்பது சவாலான பணியாகும். பெரும்பாலும், எடையை குறைப்பதற்கு உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை நாடுகிறோம். உடல் எடையை குறைக்க மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.
உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிமுறைகளை மேற்கொள்ளாலாம்.
1. நடைமுறைக்கு உகந்த இலக்குகள்
குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொள்ளுவது எடை குறைப்பதற்கு எளிதானது. சில நேரத்தில் குறைந்த கலோரி கொண்ட உணவை உட்கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை அதிகரிப்பு, ஆற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நடைமுறைக்கு உகந்த இலக்குகளை அமைப்பது முக்கியம்.
2. வழக்கத்தை கடைபிடியுங்கள்
உணவுமுறையை தேர்ந்தெடுக்கும்போது, நீண்ட காலத்திற்கு ஆர்வத்தை இழக்காமல் பின்பற்றக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டு உணவு அட்டவணையை உருவாக்க வேண்டும்.
3. உணவைத் தவிர்க்காதீர்கள்
வேலைப்பளு மற்றும் நேரமின்மை போன்ற எந்த காரணத்தைக் கொண்டும் உணவைத் தவிர்க்காதீர்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு நிறைவான காலை உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் சரியான நேர இடைவெளியில் உணவை உண்ணும்போது, அது தேவையற்ற சிற்றுண்டியின் தூண்டுதல் இருக்காது.
4. விவரக்குறிப்பை படிக்கவும்
கடைகளில் உணவுப் பொருளை வாங்கினால், அந்த பொருளின் உறையில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் கலோரி பற்றிய தகவல்கள் உள்ளது. இந்த தகவல் உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவும்.
5. சிறிய தட்டு பயன்படுத்துவது
ஒரு சிறிய தட்டைப் பயன்படுத்துவது உணவு உட்கொள்ளும் அளவைக் கண்காணிக்க உதவும். மேலும், பசியை உணராமல் குறைந்த அளவிலான உணவை உட்கொள்ள உதவும்.
இதையும் படிக்க: சோயா சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடல் தூத்துக்குடி வருகை

மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன்-காா் மோதல்: 4 போ் காயம்
இளைஞா் கடத்தல் வழக்கில் மேலும் இருவா் கைது

ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



