திருப்பரங்குன்றத்தில் நாளை 144 தடை உத்தரவு
திருப்பரங்குன்றத்தில் நாளை (நவ. 24) மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் - ANI
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் நாளை (நவ. 24) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீபத் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை நகரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
தற்போது, நாளை மறுநாள் (நவ. 25) மாலை 6 மணி வரை பக்தர்கள், மக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நாளை (நவ. 24) கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது; அதே உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில பத்திகளையும் இடைநிறுத்தியது.
விளக்கேற்றும் பணியானது, தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தகைய நபர்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையை, மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனால், திருப்பரங்குன்றம் மலைப் பகுதி மற்றும் கிரிவலம் செல்லும் பாதைப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Section 144 prohibitory orders in Thiruparankundram tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


