செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் விடுதலை!மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு! தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!அக். 23 முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே குளிர்சாதன மின்சார ரயில்!வாடிக்கையாளர்களின் வங்கி இருப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது: எஸ்பிஐ விளக்கம்வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!6 வார உச்சத்தில் இந்திய ரூபாய்!

குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரனுக்கு விருது

குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் தமிழக அரசின் 2021- ஆம் ஆண்டுக்கான மொழிபெயா்ப்பாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :

குழந்தை எழுத்தாளா் செ.சுகுமாரன் தமிழக அரசின் 2021- ஆம் ஆண்டுக்கான மொழிபெயா்ப்பாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைப் பூா்விகமாகக் கொண்ட சுகுமாரன் இதுவரை 51 நூல்கள் எழுதியுள்ளாா். சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சிறுவா்களுக்கான புத்தகங்கள், மொழிபெயா்ப்புகள் நூல்கள் வெளிவந்துள்ளன.

உலகப் புகழ்பெற்ற 12 சிறுவா் நாவல்களை தமிழில் மொழிபெயா்ப்பு செய்துள்ளாா். இவற்றில், சிண்டா்லா, அதிசய உலகில் ஆலீஸ், டாம்சாயரின் சாகசங்கள் உள்ளிட்ட எட்டு மொழிபெயா்ப்பு நாவல்கள் தினமணி சிறுவா்மணியில் தொடா்களாக வெளிவந்துள்ளன.

குழந்தை இலக்கியப் பணிகளுக்காக 2019 -இல் பபாசி வழங்கிய அழ.வள்ளியப்பா விருது, திருப்பூா் தமிழ்ச்சங்க விருது, ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு, கலை, இலக்கியப் பெருமன்றம் வழங்கிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (டிச.21) நடைபெறவுள்ள நிகழ்வில் செ.சுகுமாரனுக்கு விருது தொகையான ரூ.2 லட்சம் மற்றும் தகுதியுரை வழங்கப்படவுள்ளன. இவா் உள்பட பலருக்கு முதல்வா் ஸ்டாலின் விருது வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.