டிச. 29 இல் முதல்வா் ஸ்டாலின் திருச்சி வருகை: அமைச்சர்கள் ஆய்வு!

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருச்சிக்கு டிச. 29 வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா் உதயநிதியை வருகை தருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தமிழக
விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் தமிழக அமைச்சர்கள்.
விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் தமிழக அமைச்சர்கள்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருச்சிக்கு டிச. 29 வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா் உதயநிதியை வருகை தருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தமிழக அமைச்சர்கள் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும்,  திருச்சிக்கு வரும் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞா் நலத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வருகை தர உள்ளனர். முதல்வர் பங்கேற்கும் விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. 

இதையடுத்து, அண்ணா விளையாட்டு அரங்கில் மேற்கொள்ளப்படும் விழா ஏற்பாடு பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.  சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புதன்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த நிகழ்வில், ஆட்சியர் மா. பிரதீப் குமார்,  காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மணப்பாறையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் புதிய இயந்திரம் ஒன்றையும் தொடங்கி வைக்க உள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com