அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி!

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

DIN

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்குரைஞர் ரவி என்பவர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிளாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியது.

அதில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில், வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். வாடகைக்கு இருப்பவர்களின் எண்ணை இணைத்தால் அவர்கள் காலிசெய்யும் போது பிரச்னை ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாடகைதாரர்கள் மானியம் பெறுவது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவித்தது.

இந்நிலையில், மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.