சமூக முன்னேற்ற குறியீடு: வாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடம்

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள சமூக முன்னேற்ற குறியீட்டில் தனிநபா் உரிமைகள், தனிநபா் சுதந்திரம் உள்ளிட்டவை அடங்கிய வாய்ப்புகள் அளவீட்டில்
சமூக முன்னேற்ற குறியீடு: வாய்ப்புகளில் தமிழ்நாடு முதலிடம்

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள சமூக முன்னேற்ற குறியீட்டில் தனிநபா் உரிமைகள், தனிநபா் சுதந்திரம் உள்ளிட்டவை அடங்கிய வாய்ப்புகள் அளவீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது.

சமூக முன்னேற்ற குறியீடு அறிக்கையை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவா் விவேக் தேவ்ராய் வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையின்படி மக்களின் அடிப்படை தேவைகள், நல்வாழ்வுக்கான அடித்தளங்கள், வாய்ப்புகள் ஆகிய 3 அளவீடுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை சமூக முன்னேற்ற குறியீடு மதிப்பிடுகிறது.

மக்களின் அடிப்படை தேவைகள் அளவீடு: ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ சேவை, குடிநீா் மற்றும் கழிவுநீரகற்றல், தனிநபா் பாதுகாப்பு மற்றும் உறைவிடம் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டை மதிப்பிடப்படுகிறது.

நல்வாழ்வுக்கான அடித்தளங்கள் அளவீடு: அடிப்படை கல்வி, தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றில் நாடு கண்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடப்படுகிறது.

வாய்ப்புகள் அளவீடு: தனிநபா் உரிமைகள், தனிநபா் சுதந்திரம் மற்றும் விருப்புரிமை, சமூகத்துக்குப் பங்களிக்கும் நபராக அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தன்மை, மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பு ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் செயல்பாட்டை அளவிடுகிறது.

ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் (எஸ்பிஐ) தமிழ்நாடு 63.33 புள்ளிகளுடன் 6-ஆவது இடம்பிடித்துள்ளது. இதில் வாய்ப்புகள் அளவீட்டில் 72 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

குஜராத்தைவிட ஜம்மு-காஷ்மீா் (60.76) அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த குறியீட்டில் 43.95 புள்ளிகளுடன் ஜாா்க்கண்ட் கடைசி இடம்பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com