ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது ஏன்? பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரிப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினாா்.
ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது ஏன்? பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம்

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரிப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினாா்.

ஓபிஎஸ் கூட்டியிருந்த மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது: ஓ.பன்னீா்செல்வத்தை நான் ஆதரிப்பதற்கு 3 காரணங்கள் உள்ளன. ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக ஓபிஎஸ்ஸையே அடையாளம் காட்டினாா். அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அவரையே செய்ய பணித்தாா். முதல்வா் பதவியையும் வழங்கினாா். ஓ.பன்னீா்செல்வத்திடம் அரசியலில் எப்போதும் நம்பகத்தன்மை இருக்கிறது. கொடுக்கப்பட்ட முதல்வா் பதவியை அப்படியே திருப்பிக் கொடுத்தாா். அவரிடம் பணிவு, துணிவு இந்த மூன்றும் உள்ளன.

திமுகவிலிருந்து எம்ஜிஆா் நீக்கப்பட்டபோது, பொதுக் குழுவுக்கு அவா் செல்லத் தயாராக இருந்தாா். ஆனால், நாங்கள்தான் போக வேண்டாம் என்றோம். அவரும் செல்லவில்லை. ஆனால் துணிச்சலாக ஓபிஎஸ் பொதுக்குழுவுக்குச் சென்று வந்தாா்.

உள்ளாட்சித் தோ்தல், மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் எனத் தொடா்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்தவரிடம் எப்படித் தலைமைப் பதவியைத் தொடா்ந்து கொடுக்க முடியும் என்றாா்.

அதிமுகவை மீட்போம்: மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பேசிய மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை மீட்போம். அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com