"சென்னையில் மார்ச் 22-இல் உலகத் தமிழ்ச் சங்கமம் மாநாடு'

சென்னையில் அடுத்த ஆண்டு மார்ச் 22-இல் உலகத் தமிழ் சங்கமம் மாநாடு நடைபெறவுள்ளதாக, உலகத் தமிழ் ஆய்வு மையத் தலைவர் டாக்டர் ரவீந்திரா தெரிவித்தார்.
"சென்னையில் மார்ச் 22-இல் உலகத் தமிழ்ச் சங்கமம் மாநாடு'

சென்னையில் அடுத்த ஆண்டு மார்ச் 22-இல் உலகத் தமிழ் சங்கமம் மாநாடு நடைபெறவுள்ளதாக, உலகத் தமிழ் ஆய்வு மையத் தலைவர் டாக்டர் ரவீந்திரா தெரிவித்தார்.
 இதுதொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
 உலகின் முதல் தமிழன் குமரிக் கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்தான் என்ற வரலாற்று உண்மையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உலக தமிழ்ச் சங்கமம் மாநாடு சென்னை நேரு விளையாட்டரங்கில் 2023 மார்ச் 22-இல் நடைபெறவுள்ளது.
 இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ் ஆய்வு மையம் செய்துவருகிறது. மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், 186 நாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் தமிழறிஞர்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். 1,330 தமிழ்ச் சான்றோர் சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.
 தமிழின் தொன்மையையும், தமிழர்களின் வரலாற்று உண்மைகளையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர்கள் தொன்மைப் பாதுகாப்பு கவுன்சிலின் சர்வதேச தலைவராக அமெரிக்காவில் உள்ள டாக்டர் அர்த்தநாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழக மாணவர்-மாணவிகளுக்கு உலகளவில் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநாட்டு மேடையில் மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி கெளரவிக்கப்படவுள்ளார்.
 மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com