சாகித்ய அகாதெமி விருது: எழுத்தாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
கே. நல்லதம்பி / மு. ராஜேந்திரன்
கே. நல்லதம்பி / மு. ராஜேந்திரன்


சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை' எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மு. ராஜேந்திரனுக்கு (ஓய்வு) என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோன்று, மொழிபெயர்ப்பாளர் விருது எழுத்தாளர் கே.நல்லதம்பிக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வெறுப்புணர்வும், வன்முறையும் மக்களை எந்த அளவுக்கு வதைக்கும் என்ற வலியைக் கூறி, காந்தியடிகள் காட்டிய அமைதிப்பாதையை வலியுறுத்தும் "யாத் வஷேம்" கன்னட நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெறத் தேர்வாகியுள்ள கே. நல்லதம்பிக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com