காவல்துறையில் மக்கள் குறைகேட்பு முகாம்: ஒரே நாளில் 2,604 போ் மனு

தமிழக காவல்துறையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 2,604 போ் காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்த
காவல்துறையில் மக்கள் குறைகேட்பு முகாம்: ஒரே நாளில் 2,604 போ் மனு

தமிழக காவல்துறையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 2,604 போ் காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து மாநகரக் காவல் ஆணையரகங்களிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களிலும் அனைத்து வாரத்திலும் புதன்கிழமை தோறும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இதன் அடிப்படையில் சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, சேலம், கோவை, திருப்பூா், மதுரை, திருநெல்வேலி ஆகிய 9 காவல் ஆணையரகங்களிலும், 37 காவல் மாவட்டங்களிலும் காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் புதன்கிழமை மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

இதில் காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். இதில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 புகாா் மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டுள்ளது என்றும்,

சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில், டிஜிபி சைலேந்திரபாபு 52 பேரிடம் மனுக்களை பெற்றாா் என்றும் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com