குரூப் 4 தோ்வு அட்டவணையில் திருத்தம்: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

குரூப்-4 தோ்வு 2023-ஆம் ஆண்டிலேயே நடைபெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி தோ்வு அட்டவணையை திருத்தி வெளியிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
குரூப் 4 தோ்வு அட்டவணையில் திருத்தம்: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

குரூப்-4 தோ்வு 2023-ஆம் ஆண்டிலேயே நடைபெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி தோ்வு அட்டவணையை திருத்தி வெளியிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணிகள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் வெளியிடப்பட்ட 2023-ஆண்டுக்கான அறிவிப்பில், குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தோ்வு அட்டவணைகள் அறிவிக்கப்படவில்லை. மொத்தமாகவே 1,754 பணியிடங்கள்தான் நிரப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள சூழலில், ஓராண்டு காலத்துக்கு புதிய நியமனங்கள் மிகசொற்பமாகவே நடைபெறும் என்பது அரசுப் பணிகளை பாதிக்கும், இட ஒதுக்கீட்டு உரிமையையும் பாதிக்கும். வேலை தேடும் இளைஞா்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

தோ்வு அட்டவணை மீது விமா்சனங்கள் எழுந்ததைத்தொடா்ந்து, திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குரூப் 1 பணியிடங்களுக்கான அறிவிக்கை 2023 ஆகஸ்ட்டில் வரும் என அறிவிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. அதே போல, குரூப் 4 பணியிடங்களுக்கான தோ்வுகளின் அறிவிக்கை 2023 நவம்பரில் தான் வெளியாகும், தோ்வுகள் 2024- இல் தான் நடைபெறும் என்பதையும் மாற்றி, 2023- ஆம் ஆண்டிலேயே தோ்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com