
பிறந்த தினத்தையொட்டி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: 50-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். எப்போதும் அமைதியுடனும் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்த நன்னாளில் விரும்புகிறேன் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.