தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு இல்லை: சீமான்

தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு இல்லை: சீமான்

தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
கக்கனின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் காப்புக்காடுகளைச் சுற்றி கனிம வளங்கள் எடுக்க, ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை தற்போது தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதற்காக அறிக்கைக் கொடுத்துள்ளோம், விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

அன்புமணி மற்றும் பல சூழலியல் ஆர்வலர்கள் அதை எதிர்த்துக் கண்டித்துள்ளனர். திமுகவே சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் அணி என்றொரு அமைப்பை உருவாக்கியது. ஆனாலும் இவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராகத் தான் வேலை செய்கிறார்கள். ஏற்கனவே மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ‘நியூட்ரினோ ஆய்வு’ என்பதே பேராபத்து விளைவிக்கக்கூடியது. தற்போது இந்தக் காப்புக்காடுகளைச் சுற்றி கனிம வளங்களை எடுப்பது என்பது அனுமதிக்கவே முடியாத ஒன்று, அதை நாங்கள் எப்படியேனும் போராடி நிறுத்துவோம்” என்று குறிப்பிட்டார். 
தமிழக மக்கள் நலன் சார்ந்த எந்த செயல்பாடுகளிலும் ஆளுநரின் பங்களிப்பு என்பது இல்லை. இத்தனைக் கோடி மக்களால் நிறுவப்பட்ட ஒரு அரசு எடுக்கும் முடிவை, கையெழுத்திடாமல் காலதாமதப்படுத்தி, அரசுக்கு இடையூறாக இருப்பது முற்றிலும் தவறு. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய ஆவணத்தையும் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். தற்போது இந்த கூட்டுறவு சங்க மசோதாவையும் முன்னகர விடாமல் தாமதப் படுத்துகிறார். 
மக்கள் நலன் சார்ந்த எது ஒன்றையும் ஏற்கமாட்டார் என்றால் பிறகு அந்த ஆளுநர் பதவி எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com