துறைமுகங்களில் 3ஆம் எண் கூண்டு ஏற்றம்

பாம்பன், நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  
துறைமுகங்களில் 3ஆம் எண் கூண்டு ஏற்றம்

பாம்பன், நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதேசமயம் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் மேற்கு, தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து குமரி கடல் பகுதியை நாளை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com