மின் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

NOTIFICATION FOR RECRUITMENT OF ENGINEERING GRADUATES AS GRADUATE ENGINEER TRAINEES (GETs) IN DVC THROUGH GATE 2022
மின் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


மத்திய அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனமான தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷயன்ல் (டிவிசி) நிரப்பப்பட உள்ள பொறியியல் பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். PLR/GET 2022/02 தேதி: 2.12.2022

நிறுவனம்: Damodar Valley Corporation

பணி: Graduate engineer Trainees(GET)

காலியிடங்கள்: 100

1. GET(Mech) - 27 
2. GET (Elec) -  45
3. GET (Civil) - 09 
4. GET (C&I) - 09 
5. GET(IT) - 05 
6. GET(Comm) - 05

சம்பளம்: மாதம் ரூ.56,100 -1,77,500

வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட்-2022 தகுதித் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.dvc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com