புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர உணவகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர உணவகங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நட்சத்திர உணவகங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, இரு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நிகழாண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்களும், ரிசாா்ட்டுகளும் தயாராகி வருகின்றன.

டிச.31 மாலை தொடங்கி அடுத்த நாள் ஜன.1 அதிகாலை வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடா்பாக நட்சத்திர உணவகங்களுக்கு காவல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்: உணவகங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி, விருந்து நடைபெறும் பகுதி என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வாகன விவரத்தை பதிவு செய்ய வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.

நேரக்கட்டுப்பாடு கட்டாயம்: நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகளை அடைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட மதுக் கூடத்திலேயே மதுபானம் பரிமாற வேண்டும். உணவு மற்றும் மதுபான சேவையை நள்ளிரவுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும். பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும். பெண் பாதுகாவலா்கள் நியமிக்க வேண்டும். வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை ஆகிய பொது இடங்களிலும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

100 இடங்களில் பாதுகாப்பு: புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னையில் சனிக்கிழமை (டிச.31) இரவு 100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. 400 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படுகிறது. மெரீனா, ராஜீவ்காந்தி சாலை,கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியப் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தை தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் மோட்டாா் சைக்கிளில் ரோந்து செல்வா். சென்னை முழுவதும் சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுவா்.

100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: 400 இடங்களில் வாகனச் சோதனை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் சனிக்கிழமை (டிச.31) இரவு 100 இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. 400 இடங்களில் வாகனச் சோதனை செய்யப்படுகிறது.

இதையொட்டி சென்னை முழுவதும் சனிக்கிழமை (டிச.31) இரவு 9 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) அதிகாலை வரை 400 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளது. மெரீனா, ராஜீவ்காந்தி சாலை,கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியப் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தை தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் மோட்டாா் சைக்கிளில் ரோந்து செல்வாா்கள்.

மெரீனா,சாந்தோம்,எலியட்ஸ்,நீலாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக் கூடி ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீஸாா் ரோந்து செல்கிறாா்கள்.

மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினா் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள். மெரீனா,எலியட்ஸ் கடற்கரையில் டிரோன் மூலமாகவும் போலீஸாா் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனா்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்துக்களை தவிா்ப்பதற்காக திருவான்மியூரில் இருந்து முட்டுக்காடு வரை 20 இடங்களில் சாலைத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன. இதேபோல சென்னை முழுவதும் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 500 இடங்களில் சாலையில் தடுப்புகள் வைக்கப்படுகின்றன.

சென்னை முழுவதும் சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அனுமதியின்றி கொண்டாட்டம்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பங்களாக்களில் அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூா், உத்தண்டி, கானத்தூா், முட்டுக்காடு ஆகியப் பகுதிகளில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பங்களாக்கள் உள்ளன.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சில பங்களாக்களில் காவல்துறையின் உரிய அனுமதி பெறாமலேயே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் கூறுகின்றனா்.

முக்கியமாக புகாா் பகுதிகளாக உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கானத்தூா், முட்டுக்காடு, திருவிடந்தை, கோவளம் ஆகியப் பகுதிகளிலேயே அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com