பொங்கல் தொகுப்பு: டிச. 30 முதல் டோக்கன் விநியோகம்

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
பொங்கல் தொகுப்பு: டிச. 30 முதல் டோக்கன் விநியோகம்

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.
 ஜன. 4 வரை டோக்கன் விநியோகம் நடைபெறும் என்று அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி ஆகியோர் தெரிவித்தனர்.
 பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்வது தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:
 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஜன. 4 வரை நடைபெறும். இந்த டோக்கன்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் எந்தெந்தத் தேதியில் பொருள்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு வர வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
 பொங்கல் தொகுப்பாக, குடும்ப அட்டைக்கு தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியன வழங்கப்படும். கரும்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகம் செய்வதில் எந்தக் குழப்பமும் இருக்காது. தரமான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு மாற்றுத் திறனாளிகள் செல்ல சாய்வுதள வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
 நகர்ப்புறங்களில்தான் கடைக்கு 2,000 குடும்ப அட்டைகள் வரை உள்ளன. இதுபோன்ற கடைகளில் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
 நியாய விலைக் கடைகளுக்கு முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வர முடியாதபட்சத்தில் பிரத்யேக படிவம் உள்ளது. அதை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அளித்தால், அவர்கள் நியமிக்கும் நபர்கள் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com