
ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டிலேயே இப்படி ஒரு திருட்டா?
சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அந்தவகையில். வாரத்தின் நான்காம் நாளான இன்று(டிச.28) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,095 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.40,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
படிக்க: இந்தியாவின் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு
அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைநது ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...