தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக தலைமை அலுவலகம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். 
தேர்தல் ஆணையம் கடிதம்: திருப்பி அனுப்பிய அதிமுக தலைமை அலுவலகம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். 

மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்து வாழ்வோா் வாக்களிப்பதற்காக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஜனவரி 16-இல் தில்லியில் விளக்கிக் காட்டப்பட உள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளாா். அதில், அதிமுகவுக்கு அனுப்பும்போது, ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளா் என எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பியது. இந்த நிலையில் அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர். 

தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என அவர்கள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஜி-20 மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்தது. அதைத் தொடா்ந்து மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பியிருந்தது.

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலா் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று, ஜனவரி 4-இல் தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மத்திய சட்ட ஆணையம் அவ்வாறு குறிப்பிட்டிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தோ்தல் ஆணையம் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய நிகழ்வு அதிமுகவில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com