ஆதாரை இணைக்க வேண்டும்!: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்துள்ள தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Published on
Updated on
1 min read

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்துள்ள தேர்வர்கள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, டிஎன்பிஎஸ்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில், தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு (One Time Registration - OTR) கணக்கு மூலமாக தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in / grievance.tnpsc@tn.gov.in மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிக்கை முழு விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com