நீட் தேர்வு மூலம் சமூக நீதி கிடைத்துள்ளது: அண்ணாமலை பேச்சு

நீட் தேர்வு மூலம் சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலை பேச்சு
அண்ணாமலை பேச்சு

நாகர்கோவில்: நீட் தேர்வு மூலம் சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.

குமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு குமரி மாவட்ட பாஜக தலைவர் சி.தர்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது,

“குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 615 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. இதில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். சென்னையில் 200 வார்டுகளிலும், கோவை போன்ற மாநகராட்சியில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறோம். 100 சதவீத வெற்றி என்பதை குமரி மாவட்டத்தில் நிரூபித்து காட்டி, தமிழகத்துக்கு குமரி மாவட்டம் வழிகாட்டி என்பதை நீங்கள் மீண்டும் உணர்த்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் துக்கடே, துக்கடே கேங்க் என்று கூறியதை போல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுமோ அதை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை வாழ்த்துகிறேன். நீட் தேர்வு காரணமாக திமுகவினர், நடத்தும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் எதிர்க்கிறார்கள்.இதனால் பிண அரசியல் செய்கிறார்கள்.

நீட் தேர்வு மூலம்தான் இருளர் சமுதாய மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில்  அனுமதி கிடைத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, பல மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது, எனவே நீட் தேர்வு மூலம் அனைவருக்கும் சமூக நீதி கிடைத்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com