திமுக வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளது: கே.என்.நேரு பேட்டி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், அந்த பகுதிக்கான திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனுடன் வந்து வாக்களித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.
திருச்சி மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், அந்த பகுதிக்கான திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனுடன் வந்து வாக்களித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.

திருச்சி: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

திருச்சி மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், அந்த பகுதிக்கான திமுக வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனுடன் வந்து சனிக்கிழமை அதிகாலை 7.10 மணிக்கு வாக்களித்தார். 

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என். நேரு கூறியது:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதைப் போன்று எந்தவித பயமும் இல்லாமல், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத தேர்தலாக, அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

எடப்பாடி கே. பழனிசாமி குறைகூறுகிறார். குற்றம் சுமத்துகிறார் என்றால், அவர் முன்னாள் முதல்வராக இருப்பதால்தான் குற்றம் சுமத்தும் நிலையில் உள்ளார்.  

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மாவட்டந்தோறும் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார் மு.க.ஸ்டாலின், அப்போது அந்த மனுக்கள் எல்லாம் எங்களிடத்தில்தான் வரும். எங்களிடத்தில் மனு அளித்தால்தான் அதற்கு பலன் கிடைக்கும். எதிர்க்கட்சியிடம் மனு அளித்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி. இப்போது, நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை கூறி வாக்கு சேகரிக்கிறோம். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சொல்வதைத்தான், நாங்களும் சொல்கிறோம். ஆனால், குறைகூறுகிறார்.

நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தபோது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும் திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 15 வார்டுகளில் வெற்றி பெற்றோம். 

இப்போது, ரூ. 1,300 கோடிக்கான திட்டங்களை திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். புதிய பேருந்துநிலையம், வணிக வளாகம், சந்தை வரவுள்ளது. எனவே, அனைத்து வார்டுகளிலும் வெற்றி பெறுவோம். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரவைத் தேர்தலில் அதிமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். 

கோவை, சேலம், கரூர் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் திமுக வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளது. 

ஆளுங்கட்சியாக இருப்பதால் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவோம் என உறுதியாக கூறி வாக்கு சேகரித்தோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார் அமைச்சர் கே.என். நேரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com