நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மன்னார்குடியில் 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு

திருவாருர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மன்னார்குடி எம் ஜி ஆர் நகர் வாக்குச் சாவடியில் வரிசையல் நிற்கும் பெண்கள்.
மன்னார்குடி எம் ஜி ஆர் நகர் வாக்குச் சாவடியில் வரிசையல் நிற்கும் பெண்கள்.

 
திருவாருர்: திருவாருர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவாருர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு நகராட்சிக்கு உள்பட்ட 67 வாக்குப்பதிவு மையங்களிலும் தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. 

வாக்குப்பதிவு தொடங்கி முதல் ஒரு மணி நேரம் வாக்குச்சாவடிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருந்தனர். 8 மணிக்கு பிறகு பல வாக்குச் சாவடிகளில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மன்னார்குடி வினோ பாஜி தெரு வாக்குச்சாவடியில் வரிசையல் நிற்கும் வாக்காளர்கள்.

சில வாக்குச் சாவடிகளில் 9 மணிக்கு பிறகும் மிக மெத்தனமான வாக்குப் பதிவு இருந்தது. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிக்கு அருகில் நின்று வாக்கு சேகரிப்பதாக ஒரு கட்சியின் மீது மற்றொரு கட்சியினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். 

இதனையடுத்து , சம்மந்தப்பட்டவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒரு சில மையங்களில் வாக்குச்சாவடி அவர்கள் வாக்களர்களின் ஆவணங்களை சரிப்பார்ப்பதில் சுணக்கம் காணப்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

மொத்ததில் மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com