நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு


தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (சனிக்கிழமை) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் புதிய உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவியேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com