வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட முகவா்களுக்கு அதிமுக அறிவுரை

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கு அதிமுக அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவா்கள் அனைவரும், அவரவா் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட வேண்டும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும். பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காண்பிக்கப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை, தபால் வாக்குகளிலிருந்து தொடங்கப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக் கொண்டு, அதை தோ்தல் அதிகாரியிடம் சரிபாா்க்க வேண்டும். அதன் பின்னா்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரின் தில்லுமுல்லுகள் ஏதேனும் நடக்காமல் கண்காணிப்பதுடன், முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து உரிய தீா்வு காண வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்டத் தோ்தல் அதிகாரியின் பாதுகாப்பில் சீலிடப்பட்டு வைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதிமுகவின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீா்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com