ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை: 39 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தின் காரணமாக தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. 
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை: 39 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தின் காரணமாக தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில், இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. இடையில் ஓரிரு நாள்கள் விலை சற்று குறைந்தாலும், கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது. புதன்கிழமை சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. 

இனிவரும் நாள்களில் புதிய உச்சத்தைத்தொடும் என்று தங்கம் மற்றும் வைர நகை வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.1,240 உயர்ந்து, ரூ.38.992 ஆகவும், கிராம் ஒன்றுக்கு ரூ.155 உயர்ந்து, ரூ.4,874-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.70 உயர்ந்து ரூ.71.40 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,700 உயர்ந்து ரூ.71,400 ஆகவும் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com