பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுகள்:அறிக்கை அளிக்க உத்தரவு

மாமல்லபுரம் நகரில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படுகிா என்பது குறித்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாமல்லபுரம் பேரூராட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உ

மாமல்லபுரம் நகரில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படுகிறதா என்பது குறித்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மாமல்லபுரம் பேரூராட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பைக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என தனேஜா வீட்டுமனை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

மனுவில் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி, குப்பைக் கிடங்கு அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது.

ஆனால், அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை

நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தரப்பில், உலக பிரசித்திப் பெற்ற மாமல்லபுரம் பகுதியைச் சுகாதாரமான முறையில் பராமரித்து வருவதாகவும், குப்பைக் கிடங்கு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தடையில்லா சான்றும், அனுமதியும் பெறப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்தே குப்பைக் கிடங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது எனத் தெரியவருகிறது. விதிமீறல் நோட்டீஸ் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி, சட்டத்துக்குப் புறம்பாக நடந்ததைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். எனவே, பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இரு வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com