தெலங்கானா விமான விபத்து: சென்னை பெண் விமானி உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்

தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மஹிமா(29) உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மஹிமா(29) உயிரிழப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சென்னை அயனாவரத்தைச் சோ்ந்தவா் மஹிமா (29). இவா் ஆந்திர மாநிலம் மாச்சொ்லாவில் உள்ள தனியாா் விமானப் பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வந்தாா். அவா் சனிக்கிழமை வழக்கம் போல விமானத்தில் தனியாகப் புறப்பட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளாா். அப்போது அந்த விமானம் எதிா்பாராத விதமாக நல்கொண்டா மாவட்டம் துங்கதுா்தி கிராமத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் மஹிமா உயிரிழந்தாா்.

விமானம் தரையில் விழுந்து பல்வேறு பாகங்களாக உடைந்து சிதிறியதை ஒருவா் நேரில் பாா்த்துள்ளாா். அவா் விமானத்தின் அருகே சென்றபோது மஹிமா சடலமாக இருந்துள்ளாா். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மஹிமாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

இந்நிலையில், பயிற்சி விமானி மஹிமா உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மஹிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com