கரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி: ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டி பேசினார். 
ஆர்.என். ரவி
ஆர்.என். ரவி


கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டி பேசினார். 

தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்ந்து நேரடியாக பாட்டப்பட்டு பேரவை உரை தொடங்கப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். 

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. 16 ஆவது பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது முதல் உரையை ஆற்றி வருகிறார். 

அதில்,  புத்தாண்டில் தமிழ்நாட்டில் மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள் தெரிவித்தார். 

ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்: 

* பெரு மழை காரணாக ஸ்தம்பித்த சென்னை, அணைகளில் இருந்து சரியான நேரத்தில் அளவான நீரை வெளியேற்றி, இயற்கை சீற்றத்தை சிறப்பாக கையாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 

* சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதல்வராக நமது முதல்வர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாள்களிலேயே இப்பெயரை முதல்வர் பெற்றிருப்பது பெருமைக்குரியது. 

* கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு. 

* தொடர்ந்து கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக ஆளுநர் பாராட்டினார். 

* தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான். 

* மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் கிடைக்க செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.  

* கரோனா நோயாளிகள் 33,117 பேர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயனடைந்த்துள்ளனர்.

*  தமிழ்நாட்டில் 88.95 சதவிகிதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

*  கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மாநில பேரிடர் நிவாண நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்துள்ளது. 

*  ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த  தமிழக அரசு நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. 

*  அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61 சதவிகித ம் அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர். 

*  மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும். 

*  குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

* முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீர்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

* அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும் அதேநேரத்தில் நமது உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம். 

* இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரக்கு வலியுறுத்தல். 

* இருமொழிக் கொள்ளையை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும். 
முதல்மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும். 

* 24,344 ஆரம்ப பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

* அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நவடிக்கை எடுக்கப்படும். 

* உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நவடிக்கை எடுக்கப்படும். 

* நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 

* எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும்.

* மேகேதாட்டுவில் அணை கடச்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. 

* வரும்முன் காப்போம் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்படு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் உயிரை காக்க நம்மை காப்போம் 48 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

* மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

* ரூ.1297 கோடியில் 2.15 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு வழங்குகிறது. 

*  ஒன்றிய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறை ஜூன் மாதத்துக்குள் நிறுத்திவிடும். இன்னும் 3,4 ஆண்டுகளுக்கு வருவாயை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டை தர வேண்டும்.
 
* தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த அரசுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

* உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1.29 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

*  குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதல்வரின் கனவு. 
வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது. 

*  விவசாயம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற நடவடிக்களை அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

* அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. 

* வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

*கோயில்  நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் புத்தக நிலையங்கள் திறக்கப்படும். 

* நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. 

*  ரூ. 500 கோடி செலவில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

*  தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

cநாட்டில் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

*  வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என்ற பாரதியின் வரிகளுடன் ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையை முடித்தவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் கூறி தனது உரையை முடித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com