சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இனி வரும் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் கா. பாலச்சந்திரன்

இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன்.

News image

தஞ்சாவூரில் நடைபெறும்  தேர்வைப் பார்வையிடுகிறார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன்.

Updated On :11 ஜனவரி 2022, 8:51 pm

இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் கா. பாலச்சந்திரன்.
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணியிடங்களுக்கான தேர்வை, மாநிலத்தின் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வைப் பார்வையிட்ட ஆணையத் தலைவர் கா. பாலச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
இனி வரக்கூடிய காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தமிழில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் இரு விதமான பணிகள் இருக்கும். குரூப் 4 தேர்வில் கொள் குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) வினாத்தாள் தமிழில் இருக்கும். மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான (டெஸ்கிரிப்டிவ்) வினாத்தாள் இருக்கும். இதில், தமிழில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 40-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும்.
குரூப்-4 தேர்விலும் 40-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால்தான், தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களைத் தகுதி மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதையும் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தேர்வாணையம் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.