பி.எம்.டி. தேவர் கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் இரண்டு நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பில் இரண்டு நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பொங்கல் விழாவிற்கு கல்லூரி செயலாளர் வாலந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வன ராஜா மற்றும் நிர்வாக குழு உறுய்பினர்கள் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரவி விழாவினை தொடங்கி வைத்தார். 

தமிழர் திருநாளான தை பொங்கல் விழாவை அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பிரிவு பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், இயற்கை வன பாதுகாப்பு குழு ஆகியோர்கள் சார்பில் இரண்டு நாள்களாக கலாச்சாரத்தோடு பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் துணை முதல்வர்கள் ஜோதிராஜன், ராமர், ஒருங்கிணைப்பாளர் பொன்ராம், அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

விழாற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் பாண்டி, ஈஸ்வரன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com