
கோப்புப்படம்
தமிழ்நாட்டில் புதிதாக 23,459 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1,53,046 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 23,459 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,91,959 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் 30-ஐ தொட்டது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம்
மேலும் 9,026 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 27,36,986 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,18,017 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 8,963
செங்கல்பட்டு - 2,504
கோவை - 1,564
திருவள்ளூர் - 1,393
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...