சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில், 8 ஆயிரம் தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தெருக்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கரோனா நோயாளிகள் உள்ளனர்.
சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!
சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!

சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில், 8 ஆயிரம் தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தெருக்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கரோனா நோயாளிகள் உள்ளனர்.

அதாவது, சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 57,591 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதில், வெறும் 8 ஆயிரம் தெருக்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் கரோனா  நோயாளிகள் இருக்கிறார். அதன்படி, 31,000 தெருக்கள் கரோனா நோயாளிகள் அற்றவையாக இருக்கும் நிலையில், இந்த 8 ஆயிரம் தெருக்களிலும் சுமார் 6 - 7 கரோனா நோயாளிகள் இருப்பதாக ஜனவரி 14ஆம் தேதி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

செப்டம்பர் மாத மத்தியில், சென்னையில் இரண்டு ஆயிரத்துக்கும் குறைவான கரோனா நோயாளிகளே இருந்தனர். 850 சாலைகள் கட்டுப்பட்டுத்தப்பட்டவையாகவும், அதில் சராசரியாக 2 நோயாளிகளும் இருந்தனர். 

ஆனால், தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிப்பது என்னவென்றால், வீடுகளில் கரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது குடும்ப உறுப்பினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் எளிதில் கரோனா பரவுவது அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாக உள்ளது.

அதாவது யாரும் வேண்டுமென்றே தனது குடும்பத்தாருக்கு கரோனாவை பரப்புவதில்லை. ஆனால், ஒருவர் கரோனா அறிகுறி தென்பட்டதுமே தங்களை தனிப்படுத்திக்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த பிறகும், வெளியூரிலிருந்து வந்த பிறகும் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பரிசோதன முடிவுகள் வந்த பிறகே தனிமைப்படுத்திக் கொள்வதால் தான் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பரவிவிடுகிறது என்கிறார்கள் சுகாதாரத் துறை ஊழியர்கள்.

இதுபோல, இந்த மாதத் தொடக்கத்தில் எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. காரணம், மும்பையிலிருந்து வந்தவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சுதந்திரமாக நடமாடியதால், அவரது குடும்பத்தில் 7 பேருக்கும், அவர்கள் மூலமாக மாற்றவர்களுக்கும் கரோனா பரவியுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள், முடிவு வரும் வரையிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். விட்டமின் சி மற்றும் சிங்க் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com