
கோப்புப் படம்
தென் தமிழகம், வடகடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தென் தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம், வட கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி
மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
ஜன.27: தென் தமிழகம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜனவரி 27-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
ஜன.28, 29: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...