‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய புதிய ‘கதர் ஆடை’ நிறுவனத்தின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.
‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய புதிய ‘கதர் ஆடை’ நிறுவனத்தின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ‘கமல்ஹாசன் ஹவுஸ் ஆஃப் கதர்’ என்கிற நிறுவனத்தைத் தொடக்கி கதர் ஆடைகளின் விற்பனையை ஆரம்பித்துள்ளார்.

கதர் ஆடைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய பாணியிலான உடை மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை 'கமல்ஹாசன் ஹவுஸ் ஆஃப் கதர்’ நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு நாளான இன்று அந்நிறுவனத்தின் இணைய விற்பனையைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.

இதுகுறித்து அவர் ‘ஆடைகளை இன்று முதல் ஆன்லைனில் வாங்கலாம். சர்வதேச விற்பனையும் விரைவில் தொடங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com