
தில்லி குடியரசு நாள் விழாவில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகம் முழுக்க பயணிக்கும் வகையில், சென்னை தீவுத்திடலிலிருந்து 3 அலங்கார ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
படிக்க | தில்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு
அதற்கு முன்பாக மெரினா காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச் சென்றன.
மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தி மதுரை செல்லவுள்ளது.
வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்தி கோவையில் ஊர்வலம் செல்லவுள்ளது.
பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் உள்ள அலங்கார ஊர்தி ஈரோட்டில் வலம் வர உள்ளது.
படிக்க | குடியரசு நாள் விழா: தில்லியில் அணிவகுத்து வந்த 21 அலங்கார ஊர்திகள்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...