
ராணிப்பேட்டையில் குடியரசு நாள் விழா
நாட்டின் 73-வது குடியரசுநாள் விழா ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
குடியரசு தினத்தில் சிறப்பாக பணியாற்றிய கருவூலத்துறை அலுவலர்களுக்கு இராணிப்பேட் மாவட்ட ஆட்சியரால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...