ஈரோட்டில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றிவைத்து மரியாதை

குடியரசு நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துனையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஈரோட்டில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றிவைத்து மரியாதை

73-ஆம் ஆண்டு குடியரசு நாளையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 73-ஆம் ஆண்டு குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுது அதன் ஒருபகுதியாக ஈரோடு வ.உ. சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்களின் பங்களிப்பு இன்றி  கொண்டாடப்பட்டது மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறையினர் மரியாதையை ஏற்றுக்கொண்டு பதக்கங்களை அணிவித்தார். தொடர்ந்து  காவல் துறை  முன்னாள் படைவீரர் நலன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவத் துறையினர் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்தார்.

229 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கரோனா தொற்று பரவல் காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் குப்பம்பாளையம் பகுதியைச் சார்ந்த சுதந்திர போராட்ட வீரர் முத்துச்சாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com