
புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த்தொற்றும், ஒமைக்ரான் தொற்றும் பரவிவருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதை பின்பற்றி, பல புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.
அதன்படி, மின்சார ரயிலில் பயணிக்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க- ஒரு காலத்தில் என்சிசியில் இருந்ததை கருதி பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி
இந்த நிலையில் பிப் 1.ஆம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேசமயம் ரயில்களில் வழக்கம்போல் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.