லாவண்யா தற்கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்: அண்ணாமலை

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
வடுகபாளையம் கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
வடுகபாளையம் கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அரியலூர்: மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்ய(16).  இவர், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியிலுள்ள விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தநிலையில், அங்கு விஷம் குடித்த அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை லாவண்யா பெற்றோரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சி சார்பில் அறிவித்திருந்த ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாணவி லாவண்யா மரணத்தை விட காவல் துரையினரின் விசாரணையே மாணவியின் பெற்றோர்களுக்கு மனக்கஷ்டத்தை அளித்து வருகிறது. எனவே மாணவி லாவண்யா மரணத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்

ஆளும் கட்சியினர் மற்றும் காவல்துறையினர், இவர்கள் தான் குற்றவாளிகள் என முடிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். பாஜக ஒரு மதத்தை மட்டும் சார்ந்தது என்பது கூறுவது தவறு. இக்கட்சியில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை பாஜக எதிர்க்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீட்டை வைத்து திமுக அரசியல் செய்தது. ஆனால், அதற்கான அவசியம் பாஜகவுக்கு இல்லை.  தமிழகத்தில் காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை.  காவல்துறையை சுதந்திரமாக செயல்பட திமுக அரசு அனுமதிக்க வேண்டும். புதுக்கோட்டையில், ஆர்.எஸ்.எஸ் .செய்தி தொடர்பாளர் கனேஷ்பாபு கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மதமாற்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், 10 நாள்களுக்கு பிறகு இருசக்கர வாகனம் காணவில்லை, கைப்பேசி காணவில்லை என பொய்யான வழக்கைப் பதிவை செய்து கனேஷ்பாபு கைது செய்யப்பட்டுள்ளார். 

திமுக அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு திமுகவினர் நெருக்கடி கொடுக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே காவல்துறையினர் நெருக்கடி இல்லாமல் வேலை பார்க்க முடியும் என்றார் அவர்.

பேட்டியின் போது, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவியும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன்,  கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவர் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com